முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் யூ விமர்சனம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      சினிமா
Miss-You-Review 2024-12-16

Source: provided

ஒரு பெரும் விபத்தால் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடுகிறார் நாயகன் சித்தார்த், அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாயகி ஆஷிகா ரங்கநாத்தை கண்டதும் காதல் கொள்கிறார். ஆனால் அவள் அவனது மனைவி என்பது அவனுக்கு மறந்து போய் விடுகிறது.

இதனால் சித்தார்த் குடும்பம் அதிர்ச்சியடைவதோடு, சித்தார்த் - ஆஷிகா இடையிலான பழைய உறவைப் பற்றிய உண்மையை அவரிடம் சொல்கிறார்கள். அந்த உண்மை என்ன?, சித்தார்த்தின் காதலை ஆஷிகா ஏற்றாரா?  இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் மிஸ் யூ. கல்லூரி மாணவர் போல் இளமையாக இருக்கும் சித்தார்த்துக்கு காதல் கதை கச்சிதமாக பொருந்துகிறது.

தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்த்திருந்தாலும், அவ்வபோது தன்னை சாக்லெட் பாய் இல்லை என்பதை நிரூபிக்க ஆக்‌ஷனிலும் ஆட்டத்திலும்  அசத்துகிறார். பாலசரவணன், மாறன், கருணாகரன் ஆகியோர் காமெடியில் கலக்குகிறார்கள்.

ஜிப்ரான் இசையில் மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து பாடல்களும் கேட்கும் விதம்.  இயக்குநர் என்.ராஜசேகருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கும் எழுத்தாளர் டான் அசோக், காதலை விட கமர்ஷியல் அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ‘மிஸ் யூ’ சுமார் ரகமே.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து