முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Tamilnadu 2024-12-21

Source: provided

சென்னை: இட ஒதுக்கீடு நடைமுறைகள் மற்றும் வார்டு மறு வரையறை முடிந்த பிறகே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

வார்டு மறுவரையறை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, "வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும், வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து