முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் வெறிச்செயல்: குரோஷியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      உலகம்
Kurosiya 2024-12-21

ஐரோப்பியா, குரோஷியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இளைஞர் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி உயிரிழந்து உள்ளார்.

தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தலைநகர் ஸாக்ரெபில் உள்ள ஆரம்ப நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை 9.50 மணிக்கு வந்த 19 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். இது தவிர, 3 சிறுவர்களும் ஓர் ஆசிரியரும் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இளைஞர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர். பள்ளிக்கு அருகிலேயே அவர் வசித்துவந்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அவர் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டார். அவர் மனநிலை சரியாக உள்ளவரா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து