முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      உலகம்
Abbas-Arakhsi-2024-10-02

டெக்ரான், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருக்குமாறும், இதில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவை நாங்கள் எச்சரித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்வீடன் நாட்டு தூதரகம் மூலமாக இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது, இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் அரசுத்தலைவர் ஒல்ஃப் ஸ்சோலஸ் தெரிவித்துள்ளார். அவர்,"ஈரான் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் நெருப்புக்குள் தள்ளியுள்ளது. என்ன விலை கொடுத்தாவது இது நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். ஜெர்மனியும் அதன் கூட்டாளிகளும் போர் நிறுத்தத்துக்காக தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள தென்கொரிய மக்களை அங்கிருந்து வெளியேற்ற ராணுவ விமானத்தை அனுப்பி வைக்குமாறு அந்நாட்டு அதிபர், யூன் சுக் யெயோல் உத்தரவிட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

“ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதை கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மருத்துவ அறிக்கைகளின் படி, தெற்கு கான் யூனிஸில் 30 பேர், வடக்கு காசாவில் 25 பேர், மத்திய காசாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கான் யூனிஸில் கொல்ப்பட்டவர்களில் 12 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் உள்ளே இருக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மருத்துவ ஆதாரங்களின் படி, குண்டுவீச்சு தாக்குதலுக்கு பின்பு துணை மருத்துவ பணியாளர்கள், குடிமக்கள் பாதுகாப்பு உறுப்பினர்கள் அந்த இடங்களுக்கு செல்லவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது. மேற்கு காசாவில் ஆதரவற்றோருக்கான அல் அமால் நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கி 5 பேரைக் கொன்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து