முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்
Bom

திருவெறும்பூர், திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே காட்டூரில் மான்போர்ட் தனியார் சி.பி.எஸ்.இ. உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 3000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு காலாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறக்கப்படும் நிலையில் அதிகாலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

பள்ளி இ மெயில் முகவரிக்கு வந்த தகவலில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும், மதியம்1 மணிக்குள் இந்த வெடிகுண்டு வெடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விரைந்து வந்தனர். திருச்சி வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையில் சுமார் 7 பேர் மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகத்திற்குள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணத்தினால் திறக்கப்பட வேண்டியிருந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த இமெயில் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து