முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Om-Prakash-Chautala-2024-12

சண்டிகர், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வர் தேவிலாலின் மகன்களில் ஒருவர். சவுதாலா, அரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

இதுவரை 7 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுக்கி இருந்தார். இந்தநிலையில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சவுதலா நேற்று (டிச.,20) கர்னாலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சவுதலா ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டு காலம் சிறை தண்டனைக்கு ஆளானவர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து