முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. வளாகத்தில் நடந்த தள்ளமுள்ளுவில் காயமடைந்த பா.ஜ.க. எம்.பி.க்களை தொலைபேசியில் விசாரித்த பிரதமர்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா      அரசியல்
mODI 2023-05-25

டெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளமுள்ளுவில் காயமடைந்த பா.ஜ.க. எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டம் நடத்தினர். இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

அதேபோல், பா.ஜ.க. எம்.பி.க்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜூன கார்கேவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பிரதாப் சிங் சாரங்கி காயமுற்றது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. லட்சுமணன் கூறுகையில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நமது ஒடிஸா எம்.பி.க்கு காயம் ஏற்பட்டது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியும் அவமதித்து வருகிறது. நேருவால் அக்பேத்கர் காங்கிரஸில் இருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கினார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து