முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி, கார்கேவுக்கு எதிராக பார்லி.யில் உரிமை மீறல் நோட்டீஸ் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-20

Source: provided

புதுடெல்லி: அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமித் ஷாவின் உரையின் 12 விநாடிகள் மூலம் பொய்யை பரப்பியதால், மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராகவும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜு, “அம்பேத்கருக்கு இழைத்த அநீதிக்காக காங்கிரஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் நாங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதையும், அம்பேத்கர் விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு மற்றும் வரலாறு என்ன என்பதையும் நாங்கள் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம். 

காங்கிரசுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லாததால், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தி ஒரு தலைவராக இருந்து கொண்டு சலசலப்பில் ஈடுபடுவது அவருக்கு ஏற்புடையதல்ல. எனவே, ராகுல் காந்தி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எங்கள் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து