முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டி20 உலகக்கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆஸி., வீராங்கனை சாதனை

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      விளையாட்டு
Woman 2024 08 19

Source: provided

துபாய் : மகளிர் டி-20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட் புதிய சாதனை படைத்துள்ளார்.

148 ரன்கள் குவிப்பு...

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பெத் மூனி 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

88 ரன்னில் அவுட்...

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

புதிய சாதனை...

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மேகன் ஷட் 3 விக்கெட் வீழ்த்தியன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேகன் ஷட் (46 விக்கெட்) படைத்துள்ளார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னம் இஸ்மாயில் (43 விக்கெட்), 3ம் இடத்தில் இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் (41 விக்கெட்), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (40 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து