முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-09-01

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று  உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி  சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், சென்னையில் உள்ள  அம்மா உணவகங்களில் இன்று வரை உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் .இது தொடர்பாக  முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

நேற்று முன்தினம் அதிக அளவில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரண பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்று இலவசமாக உணவு வழங்கப்படும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து