முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் : இந்தோனேஷிய அரசு தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      உலகம்
Indonesia 2024-10-18

Source: provided

ஜகார்தா : உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளது. 

இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபுவோ சுபியான்தோ நாளை 20-ம் தேதி முதல் அதிகார பூர்வமாக தங்கள் பணிகளை துவங்க இருக்கிறார். இந்தோனேஷியாவில் உள்ள 3 குழந்தைகளில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார். இதனை களைய ஊட்டச்சத்து நிறைந்த இலவச மதிய உணவு 8.3 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவரது கனவு திட்டத்தை நிறைவேற்றும் விதமாக சோதனை அடிப்படையில் மேற்கு ஜாவாவில் இருக்கும் சுகவிலில் உள்ள 20 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சோறு, வறுத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பால் மற்றும் பழங்கள் ஒவ்வொரு நாளும் 3200 பேருக்கு வழங்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. 17 ஆயிரம் தீவுகள் இணைந்த ஒரு நாட்டில் 8.3 கோடி குழந்தைகளுக்கு நாள்தோறும் மதிய உணவு என்பது மிக பெரும் சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து