முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      இந்தியா      அரசியல்
Uddhav-thackeray

புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை (உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த முறை தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி நிலவி வரும் சூழலில், ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸும், சிவசேனை உத்தவ் அணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. சிவசேனை கட்சியின் செய்தித்தாள் சாமனாவில் ‘ஹரியாணா, மகாராஷ்டிரத்தை தொடர்ந்து தற்போது டெல்லி’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

“டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், அங்கு துணைநிலை கவர்னருக்கு அதிகளவில் அதிகாரம் இருக்கிறது, ஆனால், அவர் இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றி வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான அதிகாரத்தை திரும்பப் பெற்றுள்ளார். அவர் பா.ஜ.க.வுக்காக வேலை செய்வது மிகவும் ஆபத்தானது.

வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்துவதாக ஆணையம் கூறினாலும், மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவான செயல்பாடுகள் நடக்கின்றன. தில்லியில் வெற்றி பெற பா.ஜ.க. எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும், மக்கள் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி உள்ளது. களத்தில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க.வைவிட கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியை அதிகமாக தாக்குகின்றது. டெல்லி மக்கள் இதைக் கண்டு கண்டிப்பாக ஆச்சரியப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, “டெல்லிக்கு அரவிந்த் கேஜரிவால் செய்த பணிகளையும் அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் யாராலும் மறுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து