முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி பொதுகூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் ராகுல்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-09-09

டெல்லி, சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி நாளை பங்கேற்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வடகிழக்கு டெல்லியின் சீலம்பூரில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன் கூறுகையில்,

நாட்டு மக்களின் குரலாக ராகுல்காந்தி மாறியுள்ளார். எங்கு எந்தப் பிரச்னை நடைபெற்றாலும், அங்கு ராகுல் குரல் எழுப்புவார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதன் என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் ஏராளமான மக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள். டெல்லியில் ராகுல் காந்தியின் முதல் பேரணி இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தலைநகரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் கட்சியின் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுடன் இணைவதற்கும் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் கடந்த நவம்பரில் காங்கிரஸ் ஒரு மாத கால டெல்லி நியாய யாத்திரையை நடத்தியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து