முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சி: டெல்லியில் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடெல்லி : வாக்காளர் பட்டியலில் உத்தர பிரதேசம், பீகாரில் இருந்து வந்தவர்களை போலியாக சேர்க்க முயற்சி நடப்பதாக கூறிய கெஜ்ரிவாலை கண்டித்து அவர் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.       

டெல்லியில் அடுத்த மாதம் 5-ந்தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார்.  நியூடெல்லி தொகுதியில் தன்னை தோற்கடிப்பதற்காக 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 15 முதல் ஜனவரி 8 வரை நடைபெற்றுள்ளது.

இவர்கள் அனைவரும் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.  இந்த நிலையில் கெஜ்ரிவால் புகாரை கண்டித்து பா.ஜ.க.-வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுப்பதற்கான போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறு கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து