முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆனது

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      உலகம்
California-wildfire--2025-0

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து