முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் மீட்பு

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      இந்தியா
Assam-mine-accident-2025-01

கவுகாத்தி, அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் கடந்த 6-ம் தேதி மழையால் வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர்.

தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை உறுதி செய்துள்ள அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். ராணுவ உதவியும் கோரப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுரங்கத்தில் 7 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து