முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய விசயங்கள்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் நேற்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 (1)வது பிரிவில், பெண்ணை வன்புணர்ச்சி என்ற கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தற்போதைய தண்டனையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

64 (2) பிரிவின்படி, காவல் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பெற்ற ஒருவராலோ, நம்பிய நெருங்கிய உறவினரால் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு தற்போது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்படுகிறது. அது 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 65 (2)வது பிரிவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-வது பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

70 (1) வது பிரிவில், பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்ட தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 70 (2) வது பிரிவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.

71-வது பிரிவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கப்படுகிது. அது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 74-வது பிரிவில், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. 77-வது பிரிவின்படி, மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. திராவகம் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திராவகத்தை வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றங்கள் எதற்கும் ஜாமீன் கிடையாது. குற்றவாளி உடனே கைது செய்யப்படுவார். ஆயுள் தண்டனை என்பது சிறையில் அவர் இயற்கையாக சாகும் வரை நீடிக்கும். பாரதீய நகரிக் சுரஷா சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின்படி, தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, அப்பீல் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு, மரண தண்டனையை தவிர மற்ற தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது. அப்பீல் தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு அவரை சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது.

குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும் வரை ஜாமீன் அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து