முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரிய அரசு அனுப்பியுள்ளது : தென்கொரிய உளவு அமைப்பு தகவல்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      உலகம்
KIM 2024-10-18

Source: provided

பியாங்யாங் : ரஷ்யாவுக்கு   12 ஆயிரம் ராணுவ வீரர்களை  வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது

 தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை  பதற்றத்தில் வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன்  மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது. 

இதனால், வடகொரியாவுக்கு எதிராக  பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.  இதற்கு கைமாறாக ரஷ்யாவுடன் மிகவும் இணக்கமாக வடகொரியா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக  போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து