முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைதூர கல்வி படிப்பில் சேர 31-ம் தேதி வரை அவகாசம் : இக்னோ பல்கலைக் கழகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
IGNOU-University 2024-09-11

Source: provided

சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி  31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசு பல்கலைக் கழகமான இக்னோ பல்கலைக் கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஜூலை 2024 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியானது, பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது. எனவே, செமஸ்டர் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி வரும் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக் கழகத்தில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., (பொது) படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. 

மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து