முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை: ஐ.ஆர்.சி.டி.சி.

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து வரும் 28-ம் தேதி புறப்படும், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை, தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்னானம் செய்து, பின்னர் பிரயாக்ராஜ், கயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக செல்லும் சேது சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலில், இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 9 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 29,420 ரூபாய் கட்டணம்.

இதே போல், நேபாளத்தில் உள்ள முக்திநாத், வாராஹி, பிந்துவாஷி கோவில்கள், மகேஷ்வர் குகை, டேவீஸ் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வழியாக செல்லும் ராமேஸ்வரம் - அயோத்தி விரைவு ரயிலில் நவம்பர் 11-ம் தேதி பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தில் இருந்து ஏ.சி. பஸ்சில், பயணியர் அழைத்து செய்யப்படுவர். 13 நாள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 49,070 ரூபாய் கட்டணம். மேலும், தகவல்களை பெற 82879 31964, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து