முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      விளையாட்டு
Sri-Lanka-1 2023-11-06

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணி விவரம்; சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.

______________________________________________________________________________

சேவாக்கின் சாதனை முறியடிப்பு

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி 4 சிக்ஸ் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் அவர் இந்திய முன்னாள் வீரரான சேவாக்கின் வாழ்நாள் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் சேவாக்கை (91 சிக்ஸ்), பின்னுக்கு தள்ளி டிம் சவுதி (93 சிக்ஸ்) 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (131 சிக்ஸ்) முதல் இடத்திலும், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்ஸ்) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்ஸ்) 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் (98 சிக்ஸ்) 4வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் (97 சிக்ஸ்) 5வது இடத்திலும் உள்ளனர்.

______________________________________________________________________________

தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

12 அணிகள் பங்கேற்கும் 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து