முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த பில்கேட்ஸ்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      உலகம்
Kamala-Bill-Gates 2024-10-2

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலா ஹாரிசுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

ஆசிய- அமெரிக்கர்கள் மத்தியில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகம் தென்படுகிறது. இவர்களில் 46 சதவீதம் பேர் பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் களம் இறங்கிய நிலையில், அவருக்கு ஓட்டளிக்க விரும்புவோர் சதவீதம் 64 ஆக அதிகரித்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து