முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      விளையாட்டு
Afghanistan 2024-06-25

Source: provided

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மத்துல்லா ஷாகிடி தலைமையிலான அந்த அணியில் முகமது நபி, ரஷீத் கான், ரஹ்மட் ஷா, குர்பாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு., ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மட் ஷா, குர்பாஸ், இக்ரம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செடிக்குல்லா அடல், தர்விஷ் ரசூலி, ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷீத் கான், நங்கயல் கரோடி, எம் காசன்பர், நூர் அகமது, பசல் ஹாக் பரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், பரீத் அகமது மாலிக்.

_______________________________________________________________

நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேற்கொண்டு இந்த அணியில் மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் கேன் வில்லியம்சன், மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.

_______________________________________________________________

ஆலோசகரான பார்த்திவ் படேல் 

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார். தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

_______________________________________________________________

கே.எல்.ராகுல் விடுவிப்பு

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து