முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்லா புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      உலகம்
Hezbollah 2024-10-23

டெல்அவிவ், ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவரான சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  

:இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. 

இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, 3 வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், ஹிஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹிஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 8-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும் போது, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் ஹஷேம் சபிதீன் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. 

ஆனால் இதை ஹிஸ்புல்லா இயக்கம் இன்னும் உறுதி செய்ய வில்லை. இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து