முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

52,000 பேர் ஆன்லைனில் முன்பதிவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு : தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Sabarimalai 2024-01-02

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நாளை 21-ம் தேதி இரவு வரை கோவில் நடை திறந்திருக்கும். வழக்கமாக மண்டல, மகர விளக்கு காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும். மாத பூஜைகளின்போது பக்தர்கள் குறைவாகவே வருவார்கள். மாத பூஜை நடைபெறும் நாட்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

ஆனால் தற்போது ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட அன்று முதலே பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரையிலும் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

இன்று வரை 52 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த இரு நாட்களிலும் தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஐப்பசி மாதத்திலேயே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மண்டல காலம் தொடங்க உள்ள அடுத்த மாதம் பக்தர்கள் மிக அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து