முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டானா புயல் எதிரொலி: 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      இந்தியா
Train 2023-04-06

கொல்கத்தா, டானா புயல் நாளை சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 21-ந் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது. மேலும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'டானா' என பெயரிடப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், வங்காளதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு- தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

பின்னர் இது ஒடிசாவின் பூரிக்கும், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக மாறி நாளை அதிகாலையில் கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேற்கு வங்காளத்தின் கடற்கரையொட்டி மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், பர்பா மற்றும் பஸ்சிம், மெதினிபூர், ஜார்கிராம், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் 24 மற்றும் 25- ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரெயில்வே வரம்பிற்கு உட்பட்டு இயக்கப்படும் 150 க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் மின்சார ரெயில்கள் 24-ம் தேதி இரவு 8 மணி முதல் 25-ம் தேதி காலை 10 மணி வரை இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து