முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      அரசியல்
PM-Modi-2024-10-17

அரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்படாவிட்டாலும், முதல்வர் முகமாக நயாப் சிங் சைனி கருதப்பட்டார். 

இம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி 3-வது முறையாக அக்கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, அரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் பஞ்ச்குலாவில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. 

இதில், கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பா.ஜ.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதாக அமித் ஷா அறிவித்தார். 

இதையடுத்து, அரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, அனில் விஜ், கிரிஷன் லால் பன்வார், ராவ் நர்பீர் சிங் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். 

 இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய சாலை போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 18 முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து