முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை: வயநாட்டில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      இந்தியா      அரசியல்
Priyanka 2024-10-23

வயநாடு, பல தேர்தல்களில் கட்சிக்காக கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால், எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை என்று வயநாட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு  நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டார். 

இதில் பிரியங்காவுடன் அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது, 

 எனக்கு 17 வயது இருக்கும்போது, 1989-ம் ஆண்டு எனது தந்தைக்காக (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) முதல் முறையாக பிரச்சாரம் செய்தேன். இப்போது 35 ஆண்டுகளாகி விட்டது. தொடர்ந்து பல தேர்தல்களில் எனது தாய், சகோதரர் மற்றும் சக காங்கிரஸ்காரர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். 

ஆனால், முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன். யு.டி.எப் வேட்பாளராக எனக்கு இந்த வாய்ப்பை அளித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், வயநாடு வேட்பாளராக எனக்கு ஆதரவு அளித்ததற்காக எனது குடும்பத்தினருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நிகழ்ந்த பேரழிவை நான் நேரில் பார்த்தேன். தனது குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன். தனது குழந்தைகளை இழந்த தாய்மார்களைச் சந்தித்தேன். ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்தவர்களையும் சந்திதேன். 

நான் சந்தித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர். அவர்கள் துணிச்சலுடன் எதிர்பார்ப்புகளின்றி உளபூர்வமாக உதவி செய்தனர். எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால் உங்களின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு கவுரவமாகும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து