முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பரில் கோவை வருகை : ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

கோவை : கோவை  விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தார்.

அதன்படி முதல் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் கோவை வருகிறார். காந்திபுரத்தில் 6.9 ஏக்கர் பரப்பளவில் ரூ. 300 கோடியில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

முன்னதாக விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பீளமேடு பகுதியில் ஏற்கனவே ஐ.டி. பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக பொதுப் பணித்துறை மூலம் கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் இந்த புதிய ஐ.டி. பார்க் கட்டப்பட்டது. 

இதை முதல்வர் திறந்து வைத்து ஐ.டி. பொறியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாக்கள் நவம்பர் 4-ம்  தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து