முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

சேலம், நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார். 

சேலம், வனவாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது. ஒவ்வொரு முறையும் தேசியக்கட்சியை ஆதரிக்கிறோம். அவர்கள் பதவிக்கு வந்தவுடன் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதைப் போல், கூட்டணிக் கட்சிகளைப் பொருட்படுத்துவதில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று தான் அவர் மத்தியில் கூட்டணி அமைக்கிறார்.

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதல்வர் ஆனார். உதயநிதி தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். தி.மு.க., குடும்ப கட்சி. வாரிசு அரசியல். மன்னர் பரம்பரையில் தான், அரசனுக்கு பிறகு இளவரசர் வருவார். 

இந்த நிலைமை தி.மு.க.,வில் இருந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்கு தலைவராக வர முடியும். அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, நேர்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒருநாள் ஏதாவது பதவி நிச்சயமாக கிடைக்கும். 

தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு சரிவும், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு எந்த சரிவும் இல்லை. லோக்சபா தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. 

பெரிய அளவில் கூட்டணி இல்லாமலே, அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து