முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் விவாதங்கள் உண்டு - விரிசல் ஏற்படவில்லை : திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-23

Source: provided

சென்னை : எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதி விடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த, கட்சி நிர்வாகி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 

ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., என்றும் மக்கள் பணியில் இருக்கும். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. தி.மு.க., கொள்கை கூட்டணி. தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்வதால் எடப்பாடி பழனிசாமி பொறாமையில் பேசுகிறார்.  

பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடையப்போகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்.

தி.மு.க., கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்.ஆனால் விரிசல் ஏற்படாது. தி.மு.க., கூட்டணி கொள்கை கூட்டணி. மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. 

மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி.  ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க எடப்பாடி பழனிசாமி வர மாட்டார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து