முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: அறிக்கையை சமர்ப்பித்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      தமிழகம்
Private-School 2024-11-05

Source: provided

திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் துறை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் வாயு கசிவுக்கான  காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25-ம் தேதி 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். வாயு கசிவு காரணமாக மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 10 நாள் விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாணவிகள் 6 பேர் மயக்கம் அடைந்தனர். அதை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் வாயுக் கசிவு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடமாடும் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில், காற்றின் தரம் குறித்து பள்ளியில் 2-வது நாளாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளியில் 3 நாட்கள் ஆய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. காற்றின் தரம் கண்காணிக்கும் வாகனத்தை பள்ளியில் நிறுத்தி 3 நாள் ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியம் முடிவு எடுத்துள்ளது.

இதனிடையே வாயு கசிவு தொடர்பாக கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் துறை செயலாளரிடம் சமர்ப்பித்தது. அதில் 

பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் கடைசியாக ஆகஸ்ட் மாதம் செயல்முறை வகுப்புகள் நடைபெற்றுள்ளன என்றும் செயல்முறை வகுப்பிற்கு பிறகு பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாமல் வைக்கப்பட்டு இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், அக்டோபர் 24-ம் தேதி பகல் 12 மணி முதல் அக்டோபர் 25-ம் தேதி  பகல் 12 மணி வரை அமோனியா வாயு அளவில் மீறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு சதுர அடி பரப்பளவில் 400 மைக்ரோகிராம் அமோனியா இருக்கலாம் என்ற அளவை தாண்டவில்லை. அன்றைய தினம் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 0.4 முதல் 9.5 மைக்ரோகிராம் அமோனியா வரை மட்டுமே இருந்தது. ஆயினும் வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து