முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை, காஞ்சிபுரம்,  கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று 7-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை  8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

வரும் 9-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10-ம் தேதி நெல்லை, குமரி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும்  11-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  12-ம் தேதி கடலூர், நாகை, தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை வானிலைசென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியசை ஒட்டியும் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து