முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாதம் பேசாமல் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் துணை நிற்க வேண்டும் : கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
Vanadi 2023 04 05

Source: provided

கோவை : வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை நிற்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமான முறையில் நூலகம் கோவை தெற்கு தொகுதியில் அமைக்கப்படுகிறது. நூலகம் பல தலைமுறைகளுக்கான திட்டமாகும். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கோவையில் நடைபெற்ற விழாவின் நிறைவில் அவரை நேரில் சந்தித்து கோவை தெற்கு தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவினை அளித்தேன்.

அவிநாசி சாலையில் நீலம்பூர் வரை மேம்பாலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் வைத்த கோரிக்கையாகும். அதே போல் தங்க நகை தொழில் சார்ந்து நான் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று நகை தயாரிப்பு பட்டறைக்கு நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார் முதல்வர். தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். அதற்கும் நன்றி.

விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் கைவினை கலைஞர்களுக்காக பல மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் அதை அமல்படுத்த வேண்டும். சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான தகவல்களை தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு 95 சதவீத நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நிலத்தையும் விரைவில் ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்தார். சாலை அமைக்கும் பணிக்கு மேலும் ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  

வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் துணை நிற்க வேண்டும்.  கோவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து