முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025-க்குள் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
Shekhar-Babu 2024-11-06

Source: provided

சென்னை : சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025 டிசம்பருக்குள்  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, சென்னை, அம்பத்தூர், பானு நகரில் 1.80 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டு மைதானம், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் எஸ்டேட் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  அமைச்சர் கூறியதாவது, 

 சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, அதே போல் அம்பத்தூர் பகுதியில் உள்ள பானு நகரில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம், இதே போன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

போரூர் ஈரநிலை பசுமை பூங்கா ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் 16.60 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இப் பூங்காவில் 103 இருக்கைகள், 560 மீட்டர் நீளம் WPC நடைபாதை, 282 மீட்டர் நீளம் செங்கல் நடைபாதை, 126 மீட்டர் நீளம் கொண்ட கருங்கல் நடைபாதை, கூடைபந்து விளையாட்டு மைதானம், அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம் மற்றும் பார்க்கிங் வசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் 2 கடைகள் அமையவுள்ளது.

2024-25 சட்டமன்ற அறிவிப்பில் அறிவித்த சென்னை, அம்பத்தூர் பானு நகரில் விளையாட்டு மைதானம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 1.80 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து மைதானம், சிறவர் விளையாட்டு திடல், பார்வையாளர் மாடம் (கேளரி), திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமையவுள்ளது. 

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 70,000 சதுர அடி கொண்ட இப்பேருந்து நிலையத்தில் 23,000 சதுர அடியில்  கட்டப்பட்டுள்ளது. மேலும் இதில் 10 கடைகள்,   சூப்பர் மார்க்கெட் / ஏ.டி.எம். மையம், முதியோர்களுக்கான தனி இருக்கைகள் / பொதுமக்கள் இருக்கைகள், அலுவலகங்கள் / டிக்கட் கவுண்டர், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் / கழிப்பட வசதிகள் கட்டப்பட்டுவருகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடாமல் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தி.மு.க. ஆட்சியில் உலகத்தரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 18 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது. குத்தாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி மாதம் 2025-ல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.12 கோடி மதிப்பீட்டில் பயணிகள் பொழுது போக்க தொலைகாட்சி வசதியுடன் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர், தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் 2025 -ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து