முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் போட்டியில்லை: சரத் பவார் திடீர் அறிவிப்பு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      இந்தியா
Sarath-Pawar 2023 04 24

Source: provided

புனே : இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சரத் பவார் அறிவித்துள்ளார். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். மராட்டிய அரசியலில் நீண்ட அரசியல் அனுபவத்தை கொண்டவர் அவர். மேற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாராமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்.பி., எம்.எல்.ஏ. என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-மந்திரி அஜித்பவாரை எதிர்த்து, அவரது தம்பி மகனும், சரத்பவாரின் பேரனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தனது பேரன் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக சரத்பவார் சுபா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "நான் எனது அரசியல் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். உள்ளூர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவு செய்து, அனைத்து பொறுப்புகளையும் அஜித்பவாரிடம் ஒப்படைத்தேன். கடந்த 25-30 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. இப்போது புதிய தலைமைக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

இந்த முழுமையடையாத பணிகளை முடிக்க புதிய தலைமை தேவை. எனது மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதன்பிறகு, மாநிலங்களவை எம்.பி.யாக வேண்டுமா என்பது குறித்து நான் முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் நான் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். ஆனால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து