முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் கைதி சித்ரவதை வழக்கு: மேலும் 11 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
polies

Source: provided

வேலூர் : வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைகளுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும் அப்போது டிஐஜி வீட்டில் அவர் திருட்டில் ஈடுபட்டதாக கூறி சிறையில் வைத்து 90 நாள்கள் தாக்கப்பட்டு, கொடுமை படுத்தப்பட்டதாக சிவகுமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிபிசிஐடி போலீசார் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியான நிலையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி, மாவட்ட காவல் ஆய்வாளர் அப்துல்ரகுமான், சிறை வார்டன் அருள்குமரன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய சிறை காவலர்களான ராஜூ, ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறை காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 பேரை பணியிடை நீக்கம் செய்யது சிறைத் துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து