முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6,000 ரன்கள், 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் நபர்: ரஞ்சி கோப்பையில் கேரள வீரர் சாதனை

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      விளையாட்டு
Karala 2024-11-06

Source: provided

லக்னோ : கேரளத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜலஜ் சக்சேனா ரஞ்சி கோப்பையில் முதன்முதலாக புதிய சாதனையை படைத்துள்ளார்.

முதல் நபரானார்...

ரஞ்சி கோப்பை குரூப் சி பிரிவில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக சேவியர் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் ஜலஜ் சக்சேனா இந்த சாதனையை செய்தார். ரஞ்சியில் 6,000 ரன்கள், 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  கேரளத்தின் முந்தையப் போட்டியில் சக்சேனா 6,000 ரன்களை கடந்து அசத்தியிருந்தார். நிதீஷ் ராணாவை விக்கெட் எடுத்ததன் மூலம் 400 விக்கெட்டுகள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

29-வது முறையாக... 

ரஞ்சி கோப்பைவரலாற்றில் 13-வது நபராகவும் 29-வது முறையாக 5 விக்கெடுகளையும் எடுத்து அசத்தியுள்ளார் ஜலஜ் சக்சேனா. 37 வயதாகும் ஜலஜ் சக்சேனா தனது முதல் தர கிரிக்கெட் போட்டியினை மத்திய பிரதேசத்துடன் 2005-ல் தொடங்கினார். அங்கு 11 வருடம் விளையாடி 159 விக்கெட்டுகள், 4,401 ரன்கள் எடுத்தார்.  2016-17 சீசனில் கேரள அணிக்கு மாறினார். கேரளத்தின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் கே.என்.அனந்தபதம்நாபனுக்குப் பிறகு அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

4-வது இந்திய வீரர்...

கடந்த சீசனில் ஜலஜ் சக்சேனா இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள், 600 விக்கெட்டுகள் எடுத்த 4ஆவது இந்தியர் என்ற சாதனையை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இந்த சாதனையை விநோ மான்கட், மதன் லால், பர்வேஜ் ரசூல் நிகழ்த்தியுள்ளார்கள். ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஆக்டிவாக இருக்கும் எந்த ஆல் ரவுண்டரும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜலஜ் சக்சேனா. இந்தியாவின் லெஜன்ட்ஸ் விஜய் ஹசாரே, மதன் லால், சுனில் ஜோஷி வரிசையில் ஜலஜ் சக்சேனாவும் இணைகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து