முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் சுப்பிரமணியன்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-08

சென்னை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐ.நா.விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருது   மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய இரண்டு விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

 மக்களைத் தேடி மருத்துவம் எனும் உன்னதமான திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இதயம் பாதுகாப்போம் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம். தொழிலாளர்களை தேடி மருத்துவம், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், பாதம் பாதுகாக்கும் திட்டம், சிறுநீரகம் விழித்திரை பாதிப்புகளை சீர் செய்யும் மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதியன்று   நியூயார்க்கில் நடந்த 79-வது ஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டது.  அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழக அரசின்   மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  டெல்லியில் நடைபெற்ற விழாவில்,  2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.இந்திய அளவில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து