முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      விளையாட்டு
New-Zealand 2024-02-16

Source: provided

வெல்லிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இடம் பிடித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டிம் சவுதி ஓய்வு...

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாத கேன் வில்லியம்சன் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு டாம் லாதம் கேப்டனாகவும், டாம் பிளெண்டல் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் மிட்செல் சாண்ட்னெர் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் நியூசிலாந்தின் டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி விவரம்:

டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளெண்டல் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, ஜேக்கப் டபி, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங், மிட்செல் சாண்ட்னெர் (2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கு மட்டும்).

போட்டி அட்டவணை விவரம்

1) முதல் டெஸ்ட் போட்டி - நவ. 28-டிச. 2 - கிறிஸ்ட்சர்ச்.

2) 2வது டெஸ்ட் போட்டி - டிச. 6-10 - வெல்லிங்டன்.

3) 3வது டெஸ்ட் போட்டி - டிச. 14-18 - ஹாமில்டன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து