முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி குறித்து நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை கேப்டன் பும்ரா ஓபன் டாக்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      விளையாட்டு
kozhi

Source: provided

பெர்த்: ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் விராட் கோலி எடுத்த கடுமையான பயிற்சிகளில் பார்த்ததாக கூறியுள்ள இந்திய அணியின் கேப்டன் பும்ரா, அவர் குறித்து நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வலை பயிற்சியில்... 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா சாதனை... 

கடைசியாக தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. எனவே இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

கோலியின் பார்ம்... 

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் விராட் கோலி எடுத்த கடுமையான பயிற்சிகளில் பார்த்ததாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியுள்ளார்.

ஒரு சிறந்த வீரர்...

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நம்முடைய விளையாட்டின் ஒரு சிறந்த வீரர். அவருக்கு எந்த ஸ்பெஷலான உள்ளீடுகளையும் நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எங்களுடைய லீடர்களில் ஒருவர். அவருக்கு கீழ்தான் நான் இந்தியாவுக்காக விளையாட அறிமுகமானேன். அவருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது தெரியும்.

பரவாயில்லை...

உங்களுடைய கெரியரில் ஒரு சில தொடர்களில் மேடு பள்ளங்கள் அமையும். அது பரவாயில்லை. ஆனால் தற்சமயத்தில் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தயாராகும் விதத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவதற்காக காத்திருக்கிறார். அவர் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப்பற்றி அதிகமாக சொல்லி நான் பாழ்படுத்த விரும்பவில்லை. விராட் கோலி தற்போது நல்ல வடிவத்தில் தெரிகிறார்" என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து