முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதவள மேலாண்மை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி ஆய்வு

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      தமிழகம்
Kayalvizhi-2024-11-21

சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி,  மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து  தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 இந்த ஆய்வு கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் பணிகளான அரசுத் துறைகளின் நிர்வாகம் மற்றும் தேவைகேற்ப அரசுப்பணியாளர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கணித்தல், மனித வளம் தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகள், விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுதல், அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்தல், அரசுப் பணிக்கான உரிய நபர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் குறித்து மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் துறை அமைச்சர் அவர்கள்  ஆய்வு மேற்கொண்டு அரசுப் பணியாளருக்கான திட்டங்களை நல்ல முறையில்  விரைந்து செயல்படுத்திடுமாறு அறிவுரை வழங்கினார்.

 இந்த ஆய்வுக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி, பயிற்சித் துறை தலைவர் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்ந்த காவல் துறை தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து