முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் சுமார் 10 டன் வெள்ளி பறிமுதல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      இந்தியா
Maharashtra

Source: provided

மும்பை: மகாராஷ்டிராவில் சுமார் 10 டன் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற நாளான நேற்று முன்தினம் மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள தால்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வழக்கமான சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நாக்பூர் நோக்கி சென்ற லாரியில் இருந்து சுமார் 10 டன் (10,080 கிலோ) எடையுள்ள வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நாசிக்கின் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தத்தாத்ரே கராலே தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும் சரிபார்த்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அக்.15 முதல், மகாராஷ்டிராவில் மாநில மற்றும் மத்திய அமைப்புகளின் அமலாக்க நடவடிக்கைகளில் ரூ.706.98 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளன. இதில் சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து