முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      விளையாட்டு
21-Ram-58-5

Source: provided

6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. 

இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இது ஒரு அபாரமான சாதனை... மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற எங்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் போட்டியின் போது சிறப்பாக விளையாடினர். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வரலாற்று வெற்றி. தேசத்திற்கு பெருமை . இந்திய அணி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . என தெரிவித்துள்ளார். 

மஞ்ரேக்கருக்கு ஷமி பதிலடி

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. இதனால் அவரை ஏலத்திற்கு முன்பாக குஜராத் நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. இதனிடையே அடிக்கடி காயத்தை சந்திக்கும் முகமது ஷமியை எந்த அணியும் பெரிய தொகைக்கு வாங்காது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

அதன் காரணமாக 2025 ஐ.பி.எல். ஏலத்தில் ஷமியின் சம்பளம் கடந்த வருடத்தை விட வெகுவாக குறையலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஞ்ரேக்கரின் இந்த கருத்திற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாபா ஜி க்கு ஜெய் ஹோ. உங்களுடைய அறிவை கொஞ்சம் உங்கள் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்துங்கள். யாராவது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் ஐயாவை தொடர்பு கொள்ளவும்" என்று பதிவிட்டுள்ளார்.

இஷான் கிஷான் குறித்து கவாஸ்கர் 

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24, 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. இதில் கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தவிர்த்து இஷான் கிஷனை 15 முதல் 20 கோடி வரை கொடுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவசியம் தேவை. அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் போட்டியை தனியாக நின்று மாற்றக்கூடிய திறமை உள்ள ஒரு வீரரை அந்த அணி வாங்கும். அந்த வகையில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வந்த இஷான் கிஷனை ரூ. 15 முதல் 20 கோடி குடுத்து வாங்க முயற்சிக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தயாராக உள்ளோம்: கம்மின்ஸ்

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால் தொடர்ந்து 3-வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அதே வேளையில் சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடர் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது, சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதும் அழுத்தம் இருக்கும். இந்தியா மிகவும் திறமையான அணி, இதனால் தொடர் ஒரு நல்ல சவாலாக இருக்கும். பார்டர்-கவாஸ்கர் டிராபியை வெல்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தியா ஒரு பெரிய அணி , ஆனால் நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம். என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து