முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சாசன நினைவு தபால் தலை வெளியீடு: குடிமக்களின் பாதுகாவலனாக அரசியலமைப்பு சட்டம் உள்ளது பார்லி. கூட்டக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      இந்தியா
Murmu 2024-11-26

Source: provided

புதுடெல்லி: அரசியல் சாசன 75வது ஆண்டு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டு பேசிய ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் 'குடிமக்களின் காவலனாக அரசியலமைப்பு சட்டம் உள்ளது' என பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அரசியல் சாசன உறுதி மொழி ஏற்று கொண்டனர். அரசியல் சாசன 75வது ஆண்டு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டார்.

பின்னர் பாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசியதாவது: நமது சமகால வாழ்க்கையில் நாம் பெற்றுள்ள முன்னேற்ற அறிக்கை தான் அரசியலமைப்பு சட்டம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரும் வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம். குடிமக்களின் காவலனாக அரசியலமைப்பு சட்டம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்து தரப்பினரின், குறிப்பாக நலிந்த பிரிவினரின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஏழைகள் சொந்த வீடுகளைப் பெறுகிறார்கள். நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் படி, அனைத்து குடிமக்களும் தங்களது கடமைகளை செய்ய வேண்டும். 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, அனைவரும் உழைக்க வேண்டும். 75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்த மைய மண்டபத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் மாபெரும் பணி நடைபெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து