முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      சினிமா
Work-review 2024-11-26

Source: provided

கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். அதே ஊரில் குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள்நாயகன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது.

அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்களின் பதிலடியை முறியடித்து தனது பாணியில் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க களம் இறங்கும் ஜோஜு ஜார்ஜ், அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘பணி படம்.

ஜோஜு ஜார்ஜ் வழக்கம் போல் தனது பேவரைட் வேட்டி சட்டையில் இயல்பாக நடித்து கலக்குகிறார். மனைவியின் நிலை கண்டு கலங்குவதும், அடுத்த கனமே அதற்கு காரணமானவர்கள் மீது இருக்கும் தனது கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவது என அதிகம் பேசாமலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மொத்தத்தில், பணி நிச்சயம் பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து