முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத்: இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்-5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      உலகம்
Islamabath 2024-11-26

Source: provided

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு கடந்த நவ.20 ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி போலீஸார் கைது செய்தனர்.

இம்ரான் கான் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். 

ஊடகத் தகவலின்படி போராட்டக்காரர்களால் ஒரு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடிப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து