முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் போட்டியில் ஐவரிகோஸ்ட்டை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா சாதனை

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      விளையாட்டு
IPL 2024-01-20

Source: provided

லாகோஸ் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.

தகுதி சுற்றுகள்... 

2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது. இதில் லாகோஸ் நகரில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா - ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நைஜீரியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.

272 ரன்கள் இலக்கு... 

நைஜீரியா தரப்பில் செலிம் சாலு 112 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐவரிகோஸ்ட் அணி, நைஜீரியா வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7.3 ஓவர்களில் வெறும் 7 ரன்னில் சுருண்டது. இதனால் நைஜீரியா அணி 264 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

வரலாற்று சாதனை... 

7 ரன்கள் மட்டுமே எடுத்த ஐவரிகோஸ்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு கடந்த செம்டம்பரில் நடந்த சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணியும், 2023-ம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஐல் ஆப் மேன் தீவு அணியும் தலா 10 ரன்னில் அடங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து