முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்கள் மற்றும் 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
cm 2024-11-26

Source: provided

 

சென்னை: மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்கள் மற்றும் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம்-வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம்-மங்கலம் பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி; கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம்-திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழு யான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்; வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்; நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்; 

திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்; ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகள்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து