முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் அன்று சி.ஏ. தேர்வுகள்: எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகை தினத்தன்று சி.ஏ. தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. 

மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். 

தமிழகத்தின் மக்கள் திருவிழாவான பொங்கல் அன்றும், உழவர் திருநாள் அன்றும்  தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழகத்தின்  தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஐ.சி.ஏ.ஐ. தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு நடத்தவில்லை.

ஐ.சி.ஏ.ஐ. என்ற சுதந்திரமான அமைப்பு நடத்துவதாக குறிப்பிட்டுள்ள பா.ஜ.க. நிர்வாகியின் பதிவை மேற்கோள் காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.  எதில் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது போலும் என்று அதில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து